மகாநதி

மகாநதி

Yet to reviewPublished By: discovery-publications

An epic saga that mirrors the flow of a massive river, carrying the stories of countless lives, generations, and the evolution of a society.

₹240

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, History
  • PlacesPuducherry / Tamil Nadu
  • Time PeriodHistorical to Contemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
வாழ்க்கையை ஓர் ஆழமான, இடையறாது ஓடும் மகாநதியாக விவரிக்கிறது இந்நாவல். ஓடும் நதி ஞானம் உபதேசித்ததுண்டா? உண்டு. அந்தச் சித்தியைப் பெற்றவர் இருவர். ஒருவன் சித்தார்த்தன். அடுத்தவன் நான். வாழ்க்கை. ஒரு மோகினிபோல என்னுடன் கூடிப் புணர்ந்த காலம் ஒன்று இருந்தது. பொற்காலம் யாருக்குத்தான் இல்லை? மோகினி, இரவும் பகலும் சேர்ந்து உடைக்கும் முட்டையில் தோன்றுபவள். அவள் வருகையை யானைக்கு மணி போல், மல்லிகை மணம் கட்டியம் கூறும். புலன்கள், ராட்சஸ நகங்களாய்க் கூர்மை அடைந்து பிரகாசிக்கும். பொன்னைக் கரைத்து வானத்தில் தெளித்தாற்போல மஞ்சள் களிகொள்ளும் பூமி. அவள் பவானி. இரண்டு கண்களால் பார்ப்பவர்க்குக் காளி. மூன்றாம் கண்ணுடையோர்க்கு அவள் சௌந்தர்ய லஹரி, தசைக் கிளர்ச்சி இராது. யோகம் பூர்ணம் அடையும் விசித்திரச் சம்யோகம் அவளுடையது. அது ஒரு வெறி; வெறியின் தழல். தழலிற நுனிச் சாட்டை பிரக்ஞை மொட்டவிழும் போதே, மொட்டு கனியாகும் அனுபவம் இது. முன்னுரையில் பிரபஞ்சன்