
முந்திரிப் பூக்கள்
Explores the memories tied to a childhood home.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsFamily Dynamics
- PlacesTamil Nadu
- Time PeriodPast/Present
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelEasy
- MoodSentimental
தமிழில் இன்று ஹைக்கூ கவிதைக்கென்று நிலையான வாசகர் வட்டம் ஒன்றிருக்கிறது. செறிவான வார்த்தைகளோடு ஹைக்கூ முதல் நூலே ஹைக்கூவாய் மலர்வதில் மகிழ்ச்சி. இயற்கையை நாடுவதும். இயற்கைக்கு திரும்புவதும் ஜென் தத்துவத்தில் எழும் பார்வை. அச்சிந்தனையால் ஹைக்கூவிலும் இயற்கையை பாடும் வழக்கம் தொடர்ந்துவருகிறது. “முந்திரிப் பூக்கள்” தமிழகத்தின் வட மாவட்டத்தைத் சேர்ந்தவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. அதனை கவிஞர் நாடறியச் செய்துள்ளார். முந்திரிப் பூக்களை மூக்குத்தி பூக்களாக பார்க்கும் கவிஞர். அது இளஞ்சிவப்பில் பெண்கள் அணியும் மூக்குத்தியைப் போல் இருப்பதாகக் கற்பனை செய்கிறார். “இளஞ்சிவப்பு முந்திரிப் பூக்கள் நினைவுப்படுத்துகிறது மூக்குத்தி அணிந்தப் பெண்களை” என்று ஹைக்கூ கவிதைக்குள் கொண்டுவருகிறார் கவிஞர். இதுபோன்ற கவிதைகளுடன் இந்நூல் நம்மை ஒவ்வொரு பக்கமும் ஆச்சரியப்படுத்துகிறது.

