
நெஞ்சொடு கிளத்தல்
A deeply psychological and emotional anthology of stories where characters confront their inner selves and pasts.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPsychology, Life
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodMelancholic
மகாபாரத்தில் வரும் குந்தி, கர்ணனைப் பெற்றெடுத்த அதே முறைமையில் ‘நெஞ்சொடு கிளத்தல்’ நாவலில் வரும் ‘குந்தி’யும் ‘கயல்’ என்றொரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். மகாபாரத குந்தி சமுதாயத்திற்கு பயந்து தன் குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு தன்னைக் காத்துக்கொள்கிறாள். ஆனால் இந்நாவலில் வரும் குந்தி நடைமுறை சமுதாய சிக்கல்களைத் தூக்கி எறிந்து குழந்தையைப் பெற்றெடுத்து அவளே வளர்க்கிறாள்.
வகுப்பில் மதி வாத்தியார் சொன்ன ராஜா ராணி கதையில் வரும் ராஜகுமாரன்தான் தன் குழந்தை பிறப்புக்குக் காரணம் என்று நம்புகிறாள். வாதாடுகிறாள். சிசுவைப் பெற்றெடுக்கிறாள். ஆளாக்குகிறாள். ராஜகுமாரன் குளத்து மீன்களில் ஒன்றாக வந்து போனதாக சாதிக்கிறாள்.
மனித நடத்தையில் பெரும்பகுதி நம் ஆழ்மனத்தில் புதைந்துள்ள ஆசைகள், பால் உணர்வு உந்துதல்கள் மற்றும் சிறு வயது அனுபவங்களால் தீர்மானிக்கப்படுவதாக சொல்லும் சிக்மண்ட் பிராய்டின் கோட்பாட்டைத்தான் குந்தி மூலம் சாத்தியப்படுத்த முயற்சிக்கிறார் நாவலாசிரியர்.
மு.வேடியப்பன்
பதிப்பாளர்

