
ஒரு புரட்சிக்காரனின் கையேடு
A political and ideological manual derived from the experiences of global revolutionaries, translated for Tamil readers.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics, Activism
- PlacesGlobal
- Time Period20th Century
- Ideal ForActivists, Youth
- Age RangeActivists, Youth
- Reading LevelIntermediate
- MoodInspiring
நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் நெருப்பின் அலைகளை எழுப்பும் பெயர் சே. பிடல் காஸ்ட்ரோ கூறுவதுபோல் அவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். கம்யூனிச அகிலமே மார்க்ஸின் கனவு. மார்க்ஸின் கனவை அவர் செயலாக்க விழைந்தார். அர்ஜன்டைனாவில் பிறந்து, க்யூபாவிற்காகப் போராடி பொலிவியா காட்டில் புரட்சிகர மரணத்தை, புரட்சிக்கான மரணத்தை தழுவிய போராளி.
நோயில் விழுந்து பாயில் படுத்து மரித்தவரல்ல சே. புரட்சிக்காக மார்புகாட்டி மரணத்தை வரித்தவர் சே. அந்த தியாகம் தான் இன்றும் இளைஞர்களின் முன் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
மரித்து மரணத்தை தோற்கடித்து இன்று உலகெங்கும் உள்ள புரட்சியை அவாவும் உள்ளங்களில் எல்லாம் வாழ்கிறார். வாழ்வார் என்றென்றும். சேவைப்போல் போராடி மரித்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவர்தான் ஆதர்சம். மாற்றத்தை விரும்பும் அனைவருக்கும் அவரே ஆதர்சம். அவருடைய கனவு, காலத்தின் கனவாக நீள்கிறது.
அவருக்கு வஉசி நூலகம் வைக்கின்ற ரெட் சல்யூட் தான் இந்தக் கையேடு. வ.உ.சி.நூலகத்தின் முதல் வெளியீடே அவரின் கொரில்லா யுத்தம்தான்.

