சாய்ந்தே சுழலும் பூமி

சாய்ந்தே சுழலும் பூமி

Yet to reviewPublished By: discovery-publications

Using the metaphor of the Earth spinning on a tilted axis, the poet explores the imperfections, ongoing struggles, and cyclical nature of human life.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Philosophy, Nature
  • Time PeriodContemporary
  • Ideal ForPoetry Lovers
  • Age RangePoetry Lovers
  • Reading LevelIntermediate
  • MoodContemplative
ஒவ்வொரு தலைமுறைக்கும் பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டேதான் வருகின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்துள்ள மாற்றம் மிகப் பெரியது. இப்போதைய இளைய தலைமுறை, சென்ற தலைமுறையின் உறவுச் சிக்கல்களையும் நுட்பமான உணர்வுகளையும் அறிந்து கொள்ள இந்தக் கதை ஒரு வாய்ப்பாக அமையும். நடுத்தர வயதுக்காரர்கள் இதைப் படிக்கும்போது, தங்கள் இளவயது நினைவுகளை மீட்டெடுக்கலாம். தாங்கள் அறிந்த மனிதர்களை இந்தக் கதாபாத்திரங்கள் நினைவு படுத்தலாம். உறவினர்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணங்கள் புரியாமல் மனஉளைச்சலுக்கு ஆளான மக்கள் எத்தனை பேர்! அதைச் சொன்னால், "இதெல்லாம் ஒரு பிரச்னையா?" என்று இக்கால இளைஞர்கள் சிரித்து விட்டுக் கடக்கலாம். ஆனால் இந்தப் பிரச்னைகளைத் தலையில் தூக்கிச் சுமந்த மக்கள் இருந்திருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் அனுபவித்த சின்னச் சின்ன சந்தோஷங்களை இன்றைய இளம் தலைமுறைக்கு இந்தக் கதை சொல்லும். உறவுகளுக்கு இடையே இருந்த பாசத்தையும் முரண்பாடுகளையும் இந்தக்கதை பேசும். கூடவே அந்தக் கால காதலையும்! ஒரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பூமியில் ஆண்களும் பெண்களும் சமமாகத்தான் மதிக்கப் படுகிறார்களா? ஒரு சாரார் பக்கமே இந்தப் பூமி சாய்ந்திருக்கிறதா?