சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு

Yet to reviewPublished By: ethir-veliyeedu

The author extensively researches the folk traditions, musical notes, and cultural motifs present in the 'Aaychiyar Kuravai' portion of Ilango Adigal's epic.

₹50

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLiterary Research, Music, Culture
  • PlacesAncient Madurai / Tamilagam
  • Time PeriodSangam Era
  • Ideal ForAcademics, Literature Students
  • Age RangeAcademics, Literature Students
  • Reading LevelAdvanced
  • MoodAnalytical
சிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்கதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை. மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து. குரவைக் கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் குறிக்கும். இது, செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிறார். இந்தக் கூத்தைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் செய்தவர், நம் தமிழிசைத் தந்தை ஆபிரகாம் பண்டிதர். அவர் தன் கருணாமிர்தசாகரம், நூலில் இக்கூத்தின்இசைமுறையைக் கட்டவிழ்த்திருக்கிறார். ஆபிரகாம் பண்டிதரின் மாணவியாகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் அமுதா பாண்டியன் அவர்கள் ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் அடுக்குப்பாடல்களாகப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். மேற்கண்ட விடயத்தை இந்நூலில் மிக நுணுக்கமாக ஆராய்ந்து, கட்டுடைப்பைச் செய்திருப்பதுடன் எளிய முறை விளக்கமும் பகிர்ந்திருக்கிறார் அமுதா பாண்டியன். நம் அறிவை நாமே விலக்கிவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் நேராது. இந்நூல், தமிழிசை, தமிழிலக்கியத் தளத்தில் மிகப்பெரிய முன்னகர்வு சாதனை நிகழ்வு.