
டி.கண்ணன் வாழ்வு இலக்கியம் அஞ்சலி
The book explores T. Kannan's impact on Tamil literature, documenting his personal life, his profound works, and offering a heartfelt homage from his contemporaries.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography, Literature
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForScholars, Literature Fans
- Age RangeScholars, Literature Fans
- Reading LevelIntermediate
- MoodReflective
தமிழ் சிறுபத்திரிகைச் சூழலின் அரிய ஆளுமைகளுள் ஒருவரான டி.கண்ணன் (1964 2025), தனது வாழ்வையே ஒரு கலை அனுபவமாக மாற்றிக் கொண்டவர்.
ஸ்ரீரங்கத்துத் தெருக்களில் கிரிக்கெட் விளையாடித் திரிந்த பால்யம் தொடங்கி, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் மாய எதார்த்த உலகைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது வரை அவரது பங்களிப்பு தனித்துவமானது.
கல்வெட்டுச் சோழன் சிறுகதைத் தொகுப்பு மற்று பிறைநிலா முற்றம் என் நினைவிற்கும்.. உன் மறதிக்கும்..கவிதைத் தொகுப்புகள் வழியாகத் தமிழ் நவீன இலக்கியத்திற்கு வளம் செர்த்தவர்.
தீவிரமான இலக்கிய விவாதங்களுக்கு இடையே சட்டெனப் பழைய திரைப்பாடல்களைப் பாடிச் சூழலை ரசிக்கத்தக்கதாக மாற்றும் வித்தை அவருக்குக் கைவந்திருந்தது. சிறுபத்திரிகைகளின் மாற்று விழுமியங்களையும் எளிமையையும் தன் வாழ்நாள் இறுதிவரை சமரசமின்றிப் பேணிக்காத்தவர்.
அவரது மறைவுக்குப் பின், நண்பர்களும் சக எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்நூல், கண்ணனின் படைப்புகள், அவரது வசீகர ஆளுமை மற்றும் அவர் வாழ்ந்த காலத்தின் நினைவுகளைப் புகைப்படங்களோடும் கட்டுரைகளோடும் பதிவு செய்கிறது.

