
ஊதா வண்ணக் கோப்பை
The story revolves around memories symbolized by a purple cup, exploring deep emotional connections and the passage of time.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRelationships, Memory
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForFiction Readers
- Age RangeFiction Readers
- Reading LevelIntermediate
- MoodEmotional
பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை. உறவுகளும் இல்லை. என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம். குடும்பம் என்ற மேல் பூச்சுகள் மறைத்திருக்கும் ஏமாற்று வித்தைகளை கண்கூடாக பார்த்து வளர்ந்தவன் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் இந்தக் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று தோற்றுப் போனவள் நான்.
என் வாழ்வென்பது என் அனுபவமாக இருத்தல் வேண்டும். மற்றவர்களின் கோட்பாடுகளுக்கு அதில் இடமில்லை என்று முடிவெடுத்தவள் நான். என் அனுபவங்களின் தேடல்களே என் வாழ்வானது. பல குழப்பங்களும் அதனாலான செயல்களும், அச்செயல்களின் விளைவுகளையும் கண்ட பிறகே வாழ்வு எத்தனை எளிமையானது என்ற தெளிவே பிறக்கிறது.
என் வாழ்வின் சுவாரசியமே, என் நட்புகளால் அது சூழப்பட்டிருப்பதுதான்.
இந்தப் புத்தகம் ஒரு நினைவேடு. என் பயணத்தில் கால் பதித்த என் ஆண் நண்பர்கள் பலரைக் கொண்ட என் ஊதா வண்ணக் கோப்பையை நிரப்பி உங்கள் கையில் அளிக்கிறேன். இதைப் பெறுவதும், பெறாததும், பாராட்டுவதும், பழித்தலும் உங்கள் சௌகரியத்திற்கானது.

