
தீரா நதி
Stories that capture the continuous, unceasing flow of life's moments, reflecting on memories, aging, and the persistent nature of love.
₹185
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTime, Life, Memories
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForLiterature Lovers
- Age RangeLiterature Lovers
- Reading LevelIntermediate
- MoodCalm, Reflective
நான் எல்லோரையும் காதல்த்துக்கொண்டும் எல்லோராலும் கைவிடப்படும் ஒருவனாகவும், எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன். நான் கொண்டாடப்படுகிறபோதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும், ஒளியிலே தெரிவது என்று நான் ஒரு கதை எழுதும் போது, அதே கதையை யாராவது நிழலிலே தொலைவது என்றுதானே மொழிபெயர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நான் இதுவரையிலும் எதையும் திட்டமிடவில்லை. எதையும் இலக்கு எனக் கொண்டு என் வாழ்வையோ, என் விரலையோ நகர்த்திக் கொள்ளவில்லை. நான் எந்த இடத்திலும் நின்றதே இல்லை. நின்று கொண்டு இருப்பதை விடச் சென்றுகொண்டு இருப்பவனாக இருக்கிறேன். ஒரு தாவரம் போல, அல்லது எனக்குப் பிடித்த வேப்ப மரம் போல, அதனதான் பருவம் சார்ந்த வெயிலும் வெயில் சார்ந்துமாக நின்று நிழல் சார்ந்தவை எழுதிக்கொண்டு வருகிறேன்.

