
தமிழியல் கலைக்களஞ்சியம் - தொகுதி 2
A detailed reference work providing extensive definitions, histories, and context for terms related to Tamilology.
₹1,200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTamilology, History, Literature
- PlacesTamil Nadu
- Time PeriodVarious
- Ideal ForScholars, Students, Libraries
- Age RangeScholars, Students, Libraries
- Reading LevelAdvanced
- MoodAcademic
கலை, தமிழில் இருக்கிறது; களஞ்சியம் தமிழில் இருக்கிறது. ஆனால் இரண்டையும் சேர்த்துக் கலைக்களஞ்சியம் என்று பொருள் பொதிந்த ஒரு சொல்லைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது தமிழ் வளர்ச்சிக் கழகம்தான்.
இந்தியா, விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குவதற்கு முதல் நாள்-1947 ஆகஸ்ட் 14, தமிழ், அறிவியல் கருத்துகளோடு அறிமுகமானது. அப்போதைய சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த திரு தி.சு.அவினாசிலிங்கம் அவர்கள் முயற்சியில், இந்திய மொழிகளுக்கு முன்மாதிரியாக- முன்னத்தி ஏராகத் தமிழ்மொழிக்குக் கலைக்களஞ்சியப் பணிகள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் தொடங்கப்பட்டுள்ளன.
பொதுக் கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளிலும் இடம் பெற்றிருக்கும் தமிழியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பான தமிழியல் கலைக்களஞ்சியம் தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்திப் பயன்கொள்ள வாய்ப்பளிக்கும்.

