
பயண சரித்திரம் கி.பி.1394 முதல் கி.பி.1488 நன்னம்பிக்கை முனை வரை பாகம் 2
An exciting historical account of global explorations, detailing the grueling sea voyages that eventually led to the rounding of the Cape of Good Hope.
₹666
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsMaritime History, Exploration
- PlacesGlobal Oceans, Africa, Europe
- Time Period1394 AD - 1488 AD
- Ideal ForHistory buffs, General readers
- Age RangeHistory buffs, General readers
- Reading LevelIntermediate
- MoodInformative
இந்தியாவுக்கு மட்டும் புதிய கடல் வழி கண்டுபிடித்து விட்டால் நம் ராஜ்ஜியத்தின் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் அல்லவா!
பதினைந்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர்களின் ஆசையும் ஏக்கமும் இதுவாகத்தான் இருந்தது. போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றியின் வாழ்நாள் லட்சியமாக இது மட்டுமே இருந்தது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காலனியாதிக்கக் கோரத்தாண்டவத்துக்கான விதை ஹென்றி போட்டது. அவர் ஏற்பாடு செய்த பயணங்களால் நிகழ்ந்தது. லிஸ்பனிலிருந்து எண்ணற்றக் கப்பல்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் உடைத்துக் கிளம்பின. ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரையில் அந்தக் கப்பல்கள் முன்னேற முன்னேற போர்ச்சுகலின் பொருளாதாரமும், அதிகார எல்லையும் சேர்ந்தே வளர்ந்தன. கி.பி88 பார்தோலோமியு பயஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து திரும்பியபோது உலகின் வரலாறு தன்னையே திருப்பிப் போட்டுக் கொள்ளத் தயாரானது
போர்ச்சுகல் தன்னை முதன்மையான காலனியாதிக்கச் சக்தியாக வளர்த்துக்கொள்ள அடித்தளம் அமைத்தது எப்படி? இந்தியாவுக்கான புதிய கடல் வழித் தேடல், ஆப்பிரிக்க ராஜ்ஜியங்களுக்குத் தீவினையானது எப்படி? ஆப்பிரிக்க அடிமைகள் அவல் அத்தியாயம் ஆரம்பமானது எப்படி? பதினைந்தாம் நூற்றாண்டு இந்தியா எப்படி இருந்தது?
பயண சரித்திரத்தின் இரண்டாம் பாகம் வரலாற்றில் புதைந்து கிடக்கும் அறியப்படாத பக்கங்களை அற்புதமாகவும், அறிந்த பக்கங்களை ஆழமாகவும் விவரிக்கிறது.
எழுத்தாளர் முகில், அச்சு ஊடகம், ஆய்வு தொலைக்காட்சி, சினிமா என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். கடந்த 20 வருடங்களில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அகம் புறம் அந்தப்புரம், உணவு சரித்திரம், ஹிட்லர், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, காதல் சரித்திரம் உள்ளிட்ட இவரது வரலாற்று நூல்கள் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்து

